நாகப்பட்டினம் – ஆகஸ்ட் -17,2025
Newz – Webteam



நாகப்பட்டினம் மாவட்டம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவானது எதிர் வரும் 29.08.2025-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கி 08.09.2025-ந் தேதி மாலை கொடி இறக்கத்துடன் முடிவடைய உள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் காவல் சரக டிஐஜி ஜியாவுல்ஹக், இ.கா.ப, நேற்று வேளாங்கண்ணி பகுதிக்கு வருகை புரிந்து திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கண்காணிப்பு கேமராக்களை (CCTV Camera) நிறுவி, அதன் முக்கியத்துவம் குறித்தும்,திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தனிப்படை அமைத்து ஆய்வு கூட்டம் நடத்தி, ஆலோசனைகள் வழங்கினார்
. மேலும் கடற்கரையில் குளிக்க அனுமதி இல்லை எனவும் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி பொதுமக்கள் மற்றும் திருப்பணிகள் எவ்வித இடையூறும் இன்றி செல்ல ஏதுவாக சிறப்பான சீரான விரைவான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் மற்றும் பல்வேறு ஆலோசனை வழங்கினார். நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.செல்வக்குமார் இ.கா.ப அவர்கள் உடன் இருந்தார்
0 Comments