தஞ்சாவூர் – ஆகஸ்ட் -24,2024
Newz -webteam
தஞ்சாவூர் மாவட்டத்தில் போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு 500 போலி மதுபானபாட்டில்கள பறிமுதல் மூவர் கைது.
தமிழகத்தில் போலி மதுபான ஆலை மூலம் தயாரிக்கப்படும் போலி மதுபானங்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அமலாக்கப் பணியகம் குற்ற புலனாய்வு பிரிவு அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறது. மாநிலத்தில் நடந்த முக்கிய சோதனையில் 23.08.2024 அன்று 500 போலி மதுபானபாட்டில்கள் மற்றும் TN 01AE 2314 Chevrolet Astra Car பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலூக்காவில் சையது இப்ராஹீம் என்பவர் குடியிருக்கும் மேலகாவேரி, மாதா கோவில் பின்புரம் பகுதியில் KMS நகரில் உள்ள தனது வீட்டில சட்ட விரோமாக போலி மதுபான தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக
குறித்த கிடைத்த தகவலின் அடிப்படையில், திருச்சி மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் இராமன்மற்றும் அவரது குழுவினர் சம்பவ இடம் சென்று பார்த்தபோது, அங்கு சையது இப்ராஹீம் என்பவரை TN 01AE 2314 Chevrolet Astra Car-ல போலி மதுபானங்களை விற்பனைக்காக ஏற்றி கொண்டிருந்த போது கையும் களவுமாக பிடித்தனர். சையது இப்ராஹீம் விசாரித்த போது, அவர் பாண்டிச்சேரி சாராயம் வாங்கி வந்து அதில் நிறமூட்டு கலந்து தமிழ்நாடு மதுபான காலிபாட்டில்களில் அடைந்து, தமிழ்நாடு மதுபானபாட்டில் ஸ்டிக்கர், முத்திரை மற்றும் ஹாலோ கிராம் அனைத்து ஒட்டி விற்பனைக்கு கோலிஞ்ராஜன் என்பவரிடம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்
.கோலிஞ்ராஜன் என்பவர் கும்பகோணம் தாலூக்கா குறிச்சி பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு மதுபானம் விற்பனை கூடம் எண். 8056-ல் உள்ள பார் நடத்திவருகிறார். இவர் கைது செய்யப்பட்டார். மேலும் சையது இப்ராஹீம் என்பவருக்கு போலி மதுபான தயாரிக்க உதவி செய்த அன்புசெல்வன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
மேலும் கடத்தலுக்கு
பயன்படுத்திய மேற்படி நான்கு சக்கரம் வாகனங்களை பறிமுதல் செய்தனர்
மயில்வாகணன், இ.கா.ப., காவல்துறை தலைவர், அமலாக்கம், சென்னை மற்றும் சியாமளாதேவி, காவல் கண்காணிப்பாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு, சென்னை அவர்களின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட இச்சோதனையில் போலி மதுபானம் தயாரிக்கும் ஆலை, 500 போலி மதுபானபாட்டில்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தியTN 01AE 2314 Chevrolet Astra Car நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி போலி மதுபான கூடம், சூபாலி மதுபான பாட்டில்கள் பறிமுதலில் ஈடுப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் டாக்டர். அமல்ராஜ், இ.கா.ப., கூடுதல் காவல்துறை இயக்குநர், அமலாக்க பணியாகம் குற்ற புலனாய்வு துறை பாராட்டியுள்ளார்.
இதுபோன்ற குற்றங்களை தடுக்க பொது மக்கள் மதுவிலக்கு காவல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா சேவை எண்.10581 அல்லது.9498410581-னை தொடர்பு கொண்டு தகவல்கள் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவல்கள் அளிப்பவர்களை பற்றிய விவரங்கள் இரகசியம் காக்கப்படும்.
0 Comments