திருவாரூர் – நவ -15,2023
newz – webteam
திருவாரூர் காவல்துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தற்போது தொடர்ந்து பெய்துவருவதால் திருவாரூர்
மாவட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களின் உயிருக்கும். உடமைகளுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் உடன் மீட்புபணிகளை மேற்கொள்ளும் வகையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கட்டுப்பாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் காவல் மீட்புக்குழுக்கள் தாயர் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஒன்றிற்கு ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் ஒரு வாகனம் என மீட்பு உபகரணங்களுடன் திருவாரூர் ஆயுதப்படையில் மூன்றும், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை ஆகிய உட்கோட்ட தலைமையீபங்களில் தலா ஒன்று என 8 மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர், இக்குழுவில் உள்ள காவல் அலுவலர்கள் அனைவரும் SDKF பயிற்சி (பேரிடர் மேலாண்மை மீட்டி பயிற்சி) முடித்தனர்கள் ஆவர். இந்நிலையில் மழை நீவிரம் அடைந்துள்ள நிலையில் மேற்கண்ட 8 மீட்பு குழுவினரையும் திருவாரூர் மாவட்ட காவலி. கண்காணிப்பாளர். S.ஜெயக்குமார்.M.S.Sc.(Agri.) இன்று திருவாரூர் ஆயுதப்படையில் ஒன்று திரட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார், மேலும் காவல் ஆளிதர்களுக்கு கனமழை மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வது குறித்தும், மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வது குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்
0 Comments