திருநெல்வேலி – ஜீலை -17,2023
newz – webteam
பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழா.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சரக பணியிடை பயிற்சி மையத்தில் திருநெல்வேலி சரகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 29 பேருக்கு உதவி ஆய்வாளர்களுக்கான பயிற்சி கடந்த மே மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பணியிடை பயிற்சி மையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு முப்பெரும் சட்டங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் போன்ற வகுப்புகள் முதன்மை சட்ட போதகர்களாலும், கவாத்து போதாகர்களால் கவாத்து பயிற்சி காலை மற்றும் மாலை நேரங்களில் நடத்தப்பட்டது. மேலும் பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு முதலுதவி பயிற்சி, துப்பாக்கி கையாளும் முறைகள் மற்றும் சிசிடிஎன்எஸ் வளைதளம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கான நிறைவு விழா இன்று வண்ணார்பேட்டை, ஆப்பில் டிரி ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார், இ.கா.ப, கலந்து கொண்டார். பின் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு நற்சான்றிதழ்களும் அனைத்து பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கும் கேடயம் வழங்கினார்.பின் சிறப்புரையாற்றிய காவல்துறை துணைத்தலைவர் அவர்கள், பொதுமக்களின் புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பொதுமக்களுக்கு திருப்திகரமாக இருந்துள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் Social media-க்கள் அதிகம் வளர்ந்துள்ள நிலையில் அனைத்து விதமான விஷயங்கள் குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் அனைவரும் சட்ட ஒழுங்கு காவல் நிலையங்களில் சிறப்பாக பணிபுரிய வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி சரக பணியிடை பயிற்சி மையம் துணை காவல் கண்காணிப்பாளர் தங்ககிருஷ்ணன்,திருநெல்வேலி ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், முதன்மை சட்டபோதகர் .ஜென்சி, முதன்மை கவாத்து போதகர் மகேஸ்வரி, உதவி சட்ட போதகர் சேட்டநாதன், சாவித்திரி,உதவி காவாத்து போதகர் ஆனந்தி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments