விழுப்புரம் – பிப் -23,2024
Newz – webteam
கண்ணகளவு திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
வாழப்பட்டு விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் சௌந்தர்ராஜன் வயது 45 என்பவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் தனது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு திறந்து கிடப்பதாகவும் தனது வீட்டிலிருந்த மூணு பவுன் நகை மற்றும் பணம் முப்பதாயிரம் களவாடி சென்றதாக அளித்த புகாரின் பேரில்வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் புகார்தாரருக்கு அதே ஊரைச் சேர்ந்த நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அளித்த தகவலின் படி
கெடார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் காவலர்கள் தலைமையில் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டுசந்தேகத்தின் பேரில் வாழப்பட்டு கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மணி என்பவரின் மகன் மகாலிங்கம் வயது 19 மற்றும் தர்மன் மகன் ஜெயக்குமார் வயது 22 ஆகியோரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் மேற்கண்ட மகாலிங்கம் மற்றும் ஜெயக்குமார் இருவரும் சேர்ந்து புகார்தாரரின் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டதின் பேரில்.
இருவரையும் கைது செய்து.நபர்களிடம் இருந்து 1 பவுன் நகை மற்றும் பணம் ரூபாய் 23,000/- கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
0 Comments