திருநெல்வேலி – பிப் -09,2024
Newz – webteam
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் பா.மூர்த்தி இ.கா.ப., மற்றும் நெல்லை காவல் துணை ஆணையர் (மேற்கு) .V.கீதா ஆகியோர் தலைமையில் காவலர் பதவிக்கான உடற்தகுதி மற்றும் திறன் தேர்வு நடைபெறும் பாளை தூய சவேரியர் கல்வியியல் கல்லூரி மைதானத்தில் வைத்து “கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு” உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உடன் சிறைத்துறை கண்காணிப்பாளர் அவர்கள், தீயணைப்பு துறை அதிகாரிகள், மருத்துவ குழுவினர், காவல் உதவி ஆணையர்கள், காவல் துறை அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள், காவல் ஆளினர்கள் ஆகியோர் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
0 Comments