விழுப்புரம் – நவ -13,2023
newz – webteam


உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் இன்று காவலர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் சரக காவல் அலுவலகத்தில் நடைபெற்றது
உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கம் அருகே ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை 53 வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.
இதில் 9 குடியிருப்புகள் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கும், 44 குடியிருப்புகள் தலைமை காவலர்கள் முதல் காவலர்கள் வரை ஒதுக்கப்பட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டு வந்த நிலையில் ஏற்கனவே 14 வீடுகள் கட்டுமான பணிகள் முடிந்து அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து விழுப்புரம் சரக காவல் துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக் IPS., இன்று 24 காவலர்களுக்கு வீட்டின் சாவி மற்றும் ஆவணங்கள் வழங்கினார்.
இதுவரை இத்திட்டத்தின் கீழ் 38 பயனாளிகளுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது.
(ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் குடியிருப்பு மதிப்பு ரூபாய் 29 லட்சம், தலைமை காவலர்கள் முதல் காவலர்கள் வரை ரூபாய் 22 லட்சம்)
0 Comments