திருநெல்வேலி -செப் -25,2024,
Newz – limton
பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலையில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்
பாளையங்கோட்டை மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக்ராஜன் (28). பசுபதி பாண்டியன் ஆதரவாளரான இவர் கடந்த மே மாதம் 20ம் தேதி பாளை., சட்டக்கல்லூரி அருகே வெட்டிகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் 18 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சேரன்மகாதேவியைச் சேர்ந்த பிரபல ரவுடி சரவணன் (24) என்பவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு கொலை முயற்சி, திருட்டு, அடிதடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சேரன்மகாதேவி போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு இன்று நெல்லை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக ரவுடி சரவணனை மதுரை மத்திய சிறையில் இருந்து போலீசார் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முத்துக்குமார் என்பரும் ஆஜரானார்.
இதில் சேரன்மகாதேவி போலீசார் சமர்பித்த ஆதரங்களின் அடிப்படையில் சரவணனும், முத்துக்குமாரும் குற்றச்செயலை ஏற்றுக்கொள்ளததால் குற்றச்சாட்டாக மாற்றப்பட்டது. இதனால் நவம்பர் மாதம் 28ம் தேதி முதல் வழக்கு விசாரணை ஆரம்பமாகும் என நீதிபதி ஒத்தி வைத்தார்.
களக்காட்டில் சுடலைக்கண்ணு என்ற சுரேசை 2020ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் சுரேஷ் என்ற பில்லா சுரேஷ், தீபக்ராஜன் கொலை வழக்கில் தொடர்புடைய பவித்திரன் உள்ளிட்ட 8 பேரை களக்காடு போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த பவித்திரனை போலீசார் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர் உட்பட 8 பேரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவர்கள் மீது போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுகளை 8 பேரும் ஏற்கவில்லை. இதனால் இந்த வழக்கு குற்றச்சாட்டாக மாற்றப்பட்டு அடுத்த மாதம் 30ம் தேதி முதல் வழக்கு விசாரணை ஆரம்பமாகும் என நீதிபதி ஒத்தி வைத்தார்.
இரண்டு வழக்குகளில் பிரபல ரவடிகளை போலீசார் நெல்லை நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
0 Comments