தூத்துக்குடி – செப் -28,2024
Newz – Webteam
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகன் அய்யனார் (27) என்பவர் மற்றும் 4 பேர் குஜராத்தில் வேலைக்குச் சென்றவர்கள் அங்கு கொத்தடிமையாக இருப்பதாகவும் அவர்களை காவல்துறையினர் மீட்டுதருமாறும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு அளித்தார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகம்மது தலைமையில் சார்பு ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் மேற்படி பெண் நீதிமன்றத்தில் அளித்த மனு தொடர்பாக குஜராத் மாநிலம் சென்று அங்கு கடும் மழை வெள்ள நேரத்திலும் அய்யனார் பணிபுரியும் இடத்திற்கு சென்று அதன் உரிமையாளர் நல்லதம்பியிடம் விசாரணை மேற்கொண்டதில் அய்யனார் விருப்பப்பட்டு பணியில் இருப்பது தெரியவந்தது.
மேற்படி மனு தொடர்பாக குஜராத் சென்று அங்கு கடும் மழை வெள்ள நேரத்திலும் விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக் கொண்டுவந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களையும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர்கள் பாராட்டினர்.
0 Comments