ஆவடி – ஜன -05,2024
Newz – webteam
டிரேடிங் செயலி மூலமாக முதலீடு செய்வதாக கூறி ரூ.1 கோடி 50 லட்சம் மோசடி செய்த நபர் கைது
ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவில் ராஜாராம் என்பவர் கொடுத்த புகார் மனுவில், லட்சுமி நாரயணன் மகன் ராஜேந்திரன் 41, தான் நடத்தும் தொழிலில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் தோறும் 3% Share Pofit தருவதாக மனுதாரர் ராஜாராமிடம் ஆசை வார்த்தைகள் கூறியதை நம்பிய மனுதாரர் ராஜாராம் கடந்த 2021-ம் வருடம் டிசம்பர் மாதம் முதல் 2023-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் வரையில் வங்கி கணக்கிற்கு சுமார் ரூ.1.50 கோடி வரையிலும் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பியுள்ளார். அந்த பணத்தை டிரேடிங் மூலமாக முதலீடு செய்து, அதில் வரும் லாபத்தில் மனுதாரர் ராஜாராமின் வங்கி கணக்கிற்கு எதிரியின் வங்கி கணக்கின் மூலம் 2023-ம் வருடம் செப்டம்பர் மாதம் வரையில் ரூ.1 லட்சத்துக்கு 3% சதவீத லாபத்தை மாதம் தோறும் மொத்தம் சுமார் ரூ.65 லட்சம் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார்.
ராஜேந்திரன் அவரது இறந்து போன தந்தை லட்சுமி நாரயணன் பெயரில் டிரேடிங் தொழில் செய்து வருவதும், ராஜேந்திரன் தனது இரு சகோதரிகள், அம்மா ஆகியோர்களுக்கு தெரியாமல் அவர்களது வங்கி கணக்கையும் பயன்படுத்தி டிரேடிங் தொழில் செய்து வந்துள்ள விவரம் மனுதாரர் ராஜாராமுக்கு தெரிய வந்ததால், மனுதாரர் ராஜாராம் மற்றும் அவரது மனைவி சுபஸ்ரீ இருவரும் ராஜேந்திரனிடமஂ ஸ்டாக் மற்றும் டிரேடிங் தொழிலுக்காக கொடுத்த ரூ. 1 கோடி 50 லட்சம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்கள்.அதறஂகு ராஜேந்திரன் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறி பணத்தை திருப்பி தராமல் மனுதாரரை ஏமாற்றி வந்துள்ளார்.
இப்புகார் மனுவின் மீது போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவுசெய்து ராஜேந்திரனை தேடி ஆவடி மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர்
சீரஞ்சீவி ராஜேந்திரனை ஆந்திராவிலஂ கைது செய்து இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடுவர் அவர்கள் முன்புஆஜர்ப்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
0 Comments