திண்டுக்கல் – டிச -03,2023
newz – webteam
போதைப் பொருள் குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 1 லட்சம் அபராதம்.
திண்டுக்கல் மாவட்டம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல்
2014 செப்டம்பர் மாதம் 21ம்தேதி இருசக்கர வாகனத்தில் வந்த திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, தெப்பத்துப்பட்டியை சேர்ந்த, பழனிச்சாமி தேவர் மகன் ரவி என்பவரை சோதனை செய்த போது அவர் ஓட்டி வந்த வாகனத்தில் 23 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவால் வழக்கு பதிவுசெய்யபட்டு விசாரனை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் கடந்த 20.03.2015 அன்று திண்டுக்கல் போதைப் பொருள் வழக்குகள் சிறப்பு நீதி மன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் நவம்பர் 30ம்தேதி நீதிபதி தனது தீர்ப்பில் இந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கின் திறம்பட புலன் விசாரணை செய்து நீதிமன்றத்தில் விசாரணை முடித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த புலன் விசாரணை அதிகாரி மற்றும் ஆளிநர்களை அமலாக்கபிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப, மிகவும் பாராட்டினார்.
0 Comments