மதுரை – டிச -03,2023
newz – webteam
மதுரை மாவட்டம், திருமங்கலம் டவுன் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில்கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்று திருமங்கலம் சோழவந்தான் ரோடு கீழஉரப்பனூர் சிவம்மாள் கோயில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக சுமார் 22 கிலோ கிராம் அளவுள்ள கஞ்சாவை காரில் கடத்தி வந்த தேனி மாவட்டம் வருசநாட்டை சார்ந்த அன்னக்கொடி மகன் சின்னன் 30,. 2) மோகன்ராஜ் 21, த/பெ.மகாதேவன், 12/4, கிழக்குத்தெரு, செங்குளம், திருமங்கலம். 3) சின்னஉடையன் (எ) சுப்பிரமணி 49, த/பெ.பெரியஉடையன், ஊத்துமேடு, திருமங்கலம். 4) நல்லகண்ணு 43, த/பெ.பாண்டி, சிவன் நகர், கப்பலூர், திருமங்கலம். 5) ஆனந்த் 27, த/பெ.பாலகுரு, தனக்கன் குளம், திருநகர். 6) ராமகிருஷ்ணன் 41, த/பெ.ஜெயராஜ், காந்தி நகர், மேற்குத் தெரு, கப்பலூர், திருமங்கலம் 7) பாபு, விசாகப்பட்டிணம் ஆகியோர்களை கைது செய்து, மேற்படி நபர்களை விசாரணை செய்ததில் அவர்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து கேரளா மாநிலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்
மேலும், மதுரை மாவட்டத்தில் இது போன்று சட்டவிரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர்கள் பெரும்பாலும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்வதாக தகவல் தெரியவந்ததால் தனிப்படை அமைக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. இனி வரும் காலங்களில் இது போன்று வெளி மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்இது போன்று கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க
விரும்புவோர் 94981-81206 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். அதன் பேரில் தக்கசட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு, தகவல் தெரிவிப்போரின் விபரம் ரகசியம் காக்கப்படும்என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.







0 Comments