திருநெல்வேலி – அக் -07,2023
newz – kompanraj
11 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
டிரைவர் உள்பட 5 பேர் கைது
நெல்லை உணவுப் பொருட்கள் கடத்தல் பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் உணவுப் பொருள் கடத்தல் பிரிவு ஆய்வாளர் கலா உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் காவலரகள் உட்பட அருகன்குளத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சின்னத்துரை என்பவரது வீட்டில் காரில் இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்த போது அருகன்குளம் இசக்கி மற்றும் சங்கர் தளவாய் மாடசாமி ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கார் மற்றும் சுமார் 9,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் தபபியோடிய சின்னத்துரை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அதேபோல் திருக்குறுங்குடி அருகே வேகமாக வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டபோது அதில் 2000 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு வருவது தெரிய வந்தது. இதைக் குறித்து வழக்குப்பதிவுசெய்து நாகர்கோவில் அகஸ்திஸ்ரத்தை சேர்ந்த டிரைவர் ராஜேஷ் (26) லோடுமேன் நாங்குநேரி ரமேஷ் (39) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர் மேலும்் தப்பி ஓடிய மாவடி முத்துவேல், குமரி முருகன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்….
0 Comments