

ஆவடி – பிப் -08,2024
Newz – webteam
அரியலூர் மாவட்டம் சாத்து மங்களத்தை சேர்ந்த கோபி ராஜன் த/பெ ராமதாஸ் என்பவர் தற்போது ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூரில் வசித்து வருகிறார். கோபி ராஜன் கேட்டரிங் டிப்ளமோ முடித்துள்ளதால் சமையல் வேலை செய்யும் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு 33 வயதாகியும் திருமணத்திற்கு பெண் அமையாத காரணத்தால் அவர்களது பெற்றோரின் அறிவுரைப்படி நாளிதழில் மணப்பந்தல் பக்கத்தில் சிவாஸ்ரீ என்ற பெயரில் தாய் தந்தை அற்ற மணமகள் என அறிந்து அதில் குறிப்பிட்டிருந்த கைபேசி எண்ணிற்கு கால் செய்து பேசியுள்ளார்.
அந்த பெண் தான் அனாதை என்பதால் கோபி தன்னுடன் நெருக்கமாக பழகுவதை பயன்படுத்தி தனது பணத்தேவைக்காக கோபி ராஜனிடம் தனக்கு பண நெருக்கடி எனவும் தன்னால் உயிர் வாழ முடியாத அளவிற்கு பிரச்சனை என்றும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியதை நம்பி அந்த பெண் கூறிய வங்கி கணக்கிற்கு சுமார் 15 இலட்சம் வரை அவர் கேட்கும் போதெல்லாம் அனுப்பி வந்துள்ளார். திருமணத்தை பற்றி பேசிய போதெல்லாம் சிவாஸ்ரீ தவிர்த்து வரவே சந்தேகமடைந்த கோபி ராஜன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதன் பின் கோபி ராஜனின் நம்பர்களை பிளாக் செய்துள்ளார்.
அதனால் கோபி ராஜன் 1930 மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் சிவாஸ்ரீ என்ற பெயரில் ஆவடி மோரையை சேர்ந்த ராஜசேகரன் என்பவருடைய மனைவி புவனேஷ்வரி என்ற 42 வயதுடைய பெண் என்பதும் அவருக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் உள்ளதும்,
திருமண தகவல் மையம் நடத்தி வந்துள்ளதும் திருமணமாகாத ஆண்களை
குறி வைத்து பெண்களின் மோக வலையில் அதிக வயதாகியும்திருமணமாகாத ஆண்களை தனது வலையில் விழ வைத்து போன்மூலமாக பேசி ஏமாற்றி பணம் பறிப்பதும், தெரிய வந்து கைது செய்து
பூந்தமல்லி முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி
புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
0 Comments