நாகபட்டினம் – செப் -11,2023
newz – webteam
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஹர்ஷ் சிங், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று 11.09.2023 உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் திட்டச்சேரி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நாட்டார் மங்களம் ரோடு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக கடத்தி வரப்பட்ட 180MLஅளவு கொண்ட 200 பாண்டி மது பாட்டில்கள் மற்றும் 450 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட ஐந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 1) கவி (28) த/பெ பாலு, ஜீவா நகர், ராமர்மடம், நாகப்பட்டினம். 2) சுசிந்திரன் (24) த/பெ மோகன், கூத்தமங்களம், பனங்காட்டூர், நாகப்பட்டினம். 3) குணா (18) த/பெ வெங்கடாஜலபதி, காலனி தெரு, பெருங்கடம்பனுர், நாகப்பட்டினம். 4) பாலசுப்புரமணியன் (29) த/பெ தங்கையன், அய்யனார் கோவில் தெரு. தேமங்களம், நாகப்பட்டினம்,5) சரத்குமார் (29) த/பெ கனேசன், நடுத்தெரு, செக்கவளம், நாகப்பட்டினம். 6) வெள்ளைமுத்துச்செல்வம் செக்கவளம், நாகப்பட்டினம், ஆகிய ஆறு , நபர்களை கைது செய்து விசாரனை மேற்கொள்ளப்பட்டுவரு கிறது. இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்
மேலும், இதுபோன்ற குற்ற செயல்களில் உங்களது ஊரிலும் யாரேனும் ஈடுபட்டால் உங்கள் எஸ்பியிடம் பேசுங்கள் – 8428103090 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தருபவர்களின் இரகசியம் பாதுகாக்கப்படும்.
0 Comments