தர்மபுரி -ஆகஸ்ட் -22,2024
Newz -webteam
14.08.2024-ம் தேதி இரவு தந்தி டிவி செய்தியில் மற்றும் தந்தி டிவி ‘எக்ஸ்’ வலைபக்கத்திலும், 18.08.2024- Shalin Maria Lawrence @ The Blue Pen 25 ) வலைபக்கத்திலும், 20.08.2024 -ம் தேதிThe Hindu (சென்னை மற்றும் பெங்களூரு பதிப்புகள்) ஆங்கில செய்தித்தாளிலும் தருமபுரி மாவட்டம், அரூர் காவல் உட்கோட்டம் மற்றும் தாலுகா, கீழ்மொரப்பூர் கிராமத்தில் இரு வேறு சமூகங்களைச் சேர்ந்த காதல் ஜோடி காணாமல்போனது தொடர்பாக பெண் வீட்டார், மேற்படி இளைஞர் வீட்டிற்கு சென்று இளைஞரின் பெற்றோர்களை அடித்து, வீட்டை சேதப்படுத்தியதாகவும்,
சாதிப்பெயரைச் சொல்லி திட்டியதாகவும், இளைஞரின் தாயாரை கடத்திச் சென்றதாகவும், அவரின் வாயில் கட்டாயப்படுத்தி ஆல்கஹால் ஊற்றப்பட்டதாகவும், இரவு முழுவதும் பாலியல் தொந்தரவு அளித்தாகவும் வெளியிடப்பட்டிருந்தது. இது குறித்து தருமபுரி மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவிக்கும் மறுப்பு செய்தி கீழ்கண்டவாறு:
கடந்த 14.08.2024-ம் தேதி 14.00 மணிக்கு தருமபுரி மாவட்டம், அரூர் காவல் உட்கோட்டம், கீழ்மொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் த/பெ. நஞ்சன் என்பவர் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்மொரப்பூர் காவல் நிலையத்தில் வழக்கானது பதிவு செய்யப்பட்டு,
காவல் துணை கண்காணிப்பாளர், அரூர் காவல் உட்கோட்டம் அவர்களை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டது. அதன்படி வழக்கின் விசாரணையை ஏற்ற காவல் துணை கண்காணிப்பாளர், அரூர் புகாரில் கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட இளைஞரின் தாயாரை என்பவரை அன்றிரவே பத்திரமாக மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். சிகிச்சையின் போது, தனக்கு ஆல்கஹால் எதுவும் வாயில் ஊற்றப்பட்டதாகவோ, பாலியல் தொந்தரவு செய்யப்பபடடதாகவோ மருத்துவரிடம் தகவல் தெரிவிக்கவில்லை. மேலும், புலன் விசாரணை அதிகாரியிடமும் அவ்வாறு கூறவில்லை.
மேலும், தங்களுடைய வீட்டை பெண்ணின் வீட்டார் சேதப்படுத்தியதாகவும் வாக்கு மூலம் கொடுக்கவில்லை. ஆனால் தன்னை சாதிப்பெயரை சொல்லிதிட்டி, அடித்த விவரத்தை மட்டும் விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். அவரின் வாக்குமூலத்தின்படி இதுவரை 3 எதிரிகள் பெண்ணின் தந்தை, தாயார் மற்றும் உறவினர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்
. ஏனைய தலைமறைவு எதிரிகளை பிடிக்க தனிப்படையமைக்கப்பட்டு தேடிவருவதுடன், வழக்கு தொடர் புலன் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்தை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களை விசாரணை செய்து விவரங்களை கேட்டறிந்தார். அவருடைய விசாரணையிலும் இளைஞரின் வீட்டை சேதப்படுத்தியதாகவோ, இளைஞரின் தாயாருக்கு வலுக்கட்டாயமாக ஆல்கஹால் ஊற்றப்பட்டதாகவோ, அரை நிர்வாணப்படுத்தி பாலியல் கொடுமை செய்ததாகவோ இளைஞரின் தாயார் கூறவில்லை.
இந்நிலையில் 20.08.2024 அன்று வழக்கின் விசாரணை அதிகாரி கேட்டுக்கொண்டதன்படி பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டப் பிரிவு 183 -ன் கீழ் அரூர் குற்றவியல் நடுவர் அவர்கள் பாதிக்கப்பட்ட நபர்களான செல்வம் மற்றும் முருகம்மாள் ஆகியோரை 21.08.2024 அன்று நேரடியாக விசாரித்து, அவர்களின் வாக்கு மூலங்களை பதிவுசெய்துள்ளார். மேலும்,
பாதிக்கப்பட்ட நால்வருக்கும் அரசால் வழங்கப்படும் தீர்வுதவித் தொகை கோரி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் காவல்துறையின் புலன் விசாரணையின் முழு விவரம் அறியாமல் சமூக ஊடகத்தில் மேற்படி சம்பவத்தைமிகைப்படுத்தியும், உண்மைக்கு புறம்பாகவும் வெளியிடும் செய்திகளால் வழக்கிற்கும், இரு வேறு சமூகங்கள் இடையே நிலவும் நல்லுறவிற்கும் குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் இம்மாதிரியான ஆதாரமற்ற தகவல்களை பதிவிடுவதையோ, பகிர்வதையோ தவிர்க்குமாறும். இந்தமறுப்புச் செய்தியை வெளியிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments