திருநெல்வேலி -செப் 20, 2023
newz – webteam
முன்னீர்பள்ளம் அருகே முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் 4 நபர்கள் கைது.
முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேல சேவல், நடுத்தெருவை சேர்ந்த சேர்ந்த விஜயகுமார் என்ற அப்பாத்துரை(65) என்பவர் 16.09.2023 அன்று மேலச்சேவலில் இருந்து கரிசல்பட்டி செல்லும் வழியில் நடராஜன் என்பவரின் தோட்டம் அருகே வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . N. சிலம்பரசன் அவர்கள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேற்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி சம்பவத்தில் தொடர்புடைய எதிரிகளை விரைந்து கைது செய்ய சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுபகுமார் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்துள்ளனர்.
மேற்படி காவல்துறையினரின் விசாரணையில் இறந்து போன விஜயகுமார் என்ற அப்பாத்துரை என்பவருக்கும் மேலச்சேவல் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்ற கண்ணன்(25), முப்பிடாதி(20) ஆகியோருக்கும் இடையே சில மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டு 16.09.2023 அன்று மேலச்சேவலில் இருந்து கரிசல்பட்டி செல்லும் வழியில் நடராஜன் என்பவரின் தோட்டம் அருகே வைத்து நவநீத கிருஷ்ணன் என்ற கண்ணன், முப்பிடாதி, மேலச்சேவல், ரஸ்தா தெற்கு தெருவை சேர்ந்த மாயாண்டி(21), நடுக்கல்லூர், துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து(20) ஆகியோர் சேர்ந்து விஜயகுமார் என்ற அப்பாத்துரையை அருவாளால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேற்படி கொலை வழக்கில் 4 எதிரிகளையும் 19.09.2023 நேற்று முன்னீர்பள்ளம் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
0 Comments