சென்னை – நவ -05,2023
newz – webteam

விழுப்புரம் மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூபாய் – 4,03,200/- லட்சம் மதிப்பிலான 4128 பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல் – இருவர் கைது.
தமிழகத்திற்கு பிற மாநில மதுபானங்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அமலாக்கப்பிரிவு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மாநிலத்தில் நடந்த முக்கிய நடவடிக்கையில் நேற்று சுமார் ரூபாய் – 4,03,200/- லட்சம் மதிப்பிலான 4128 பாண்டிச்சேரி அரசு மதுபான பாட்டில்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய கார் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் பாண்டிச்சேரி அரசு மதுபானம் கடத்தல் குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்டம் செந்தூர் சந்திப்பு ரோடு அருகே விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவுப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் வாகன சோதனை நடத்தினார். இதை தொடர்ந்து செந்தூர் சந்திப்பு ரோடு அருகே நான்கு சக்கரம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை மறித்த குழுவினர், இரு குற்றவாளிகளான, பாண்டிச்சேரியை சார்ந்த கார்த்திகேயன் வ/35 விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த சூரியா, வ/28, என்பவர்களிடமிருந்து 4128 பாண்டிச்சேரி அரசு மதுபான பாட்டில்களை கைப்பற்றப்பட்டு குற்றவாளிளை கைது செய்து மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மேற்டி நான்கு சக்கரம் மற்றும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி பாண்டிச்சேரி அரசு மதுபான பாட்டில்கள் பறிமுதலில் ஈடுப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் அமாலாக்கபிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், பாராட்டியுள்ளார்
0 Comments