சென்னை -27,2024
Newz –DGP office
தமிழ்நாடு அதி தீவிரப்படை (கமாண்டோ படை) தேசிய பாதுகாப்புப் படையுடன் ஒருங்கிணைந்து நடத்திய தீவிரவாத தடுப்பு ஒத்திகைப் பயிற்சிகள்
ஆயத்த நிலை மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றைச் சரிபார்க்க,
தமிழ்நாடு அதிதீவிரப்படை (Tamil Nadu Commando Force) தேசிய பாதுகாப்புப் படையுடன் (National Security Guard) ஒருங்கிணைந்து கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் தீவிரவாத தடுப்பு ஒத்திகைப் பயிற்சிகளை 24.07.2024 முதல் 26.07.2024 வரை நடத்தியது
. இப்பயிற்சியின் நோக்கம், சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்தவர்களுக்கு பயிற்சி மற்றும் அதன் நடைமுறைகளை பற்றி அறியவும், தேசிய மற்றும் மாநில அரசுத்துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவுவதும் ஆகும். இந்தவகையான ஒத்திகைப் பயிற்சிகள் உயர் மதிப்பு இலக்குகளில் (High Value Targets) பின்வரும் சூழ்நிலைகளில் நடத்தப்படுகிறது.
i பணயக்கைதிகள் பிடிபட்ட சூழ்நிலை
ii. பாரபட்சமான துப்பாக்கிச் சூடு
ஒரே நேரத்தில் பல தாக்குதல்கள்
iv. குண்டுவெடிப்புகள்
23.07.2024 அன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த ஒத்திகைப் பயிற்சி நடத்துவது தொடர்பாக ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த தீவிரவாத தடுப்பு ஒத்திகைப் பயிற்சிகள், உரிய அட்டவணையின்படி, கடந்த 24.07.2024 அன்று கோயம்புத்தூரில் உள்ள டைடல் பார்க் மற்றும் எல்காட் கட்டிட வளாகத்தில் பிற துறைகளைச் சார்ந்தவர்களுடன் இணைந்து நடத்தப்பட்டது
. 25.07.2024 அன்று சூலூர் விமானப் படை விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்புப் படையால் இந்த ஒத்திகைப் பயிற்சி விமானப் படை வீரர்கள் மற்றும் கோவை மாவட்ட சட்டம் ஒழுங்கு காவல்துறையைச் சார்ந்தவர்களுடன் இணைந்து நடத்தப்பட்டது. மேலும், 26.07.2024 அன்று ஈஷா யோகா மையத்திலும் இப்பயிற்சி நடத்தப்பட்டது.
பயிற்சிகள் தொடங்குவதற்கு முன்பு, இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்ட மேற்கண்ட
இடங்களில் உள்ள பொதுமக்களுக்கு, அச்சம் மற்றும் தவறான செய்திகளைப் பரப்புவதைத்
தடுக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த பயிற்சி குறித்து, எச்சரிக்கைகள் வழங்குதல்உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும், மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்எடுக்கப்பட்டன.
இப்பயிற்சிகளில் தமிழ்நாடு அதி தீவிரப்படை, தேசிய பாதுகாப்பு படை கோவைமாநகர மாவட்ட சட்டம் ஒழுங்கு காவல் துறை மற்றும் ஆயுத படை மற்றும் சம்மந்தப்பட்ட பிறதுறைகளான தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய உயர் மதிப்பு இலக்குகள், மாவட்டநிர்வாகம், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை கோவை மாநகராட்சி, மருத்துவத் துறையைச்சேர்ந்த 425 அதிகாரிகள் பணியாளர்கள் பங்கேற்றனர்.
மேற்கண்ட தீவிரவாத எதிர்ப்பு ஒத்திகை பயிற்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
இத்தகைய பயிற்சிகளை நடத்துவது. பாதுகாப்புப் படைகள் மற்றும் சம்பந்தப்பட்ட பிறதுறையைச் சார்ந்தவர்கள் நிபுணத்துவம் பெற உதவுவதோடு. இது போன்ற சம்பவம்
நிகழும்போது, திறமையாக செயல்படவும் உதவும்.
0 Comments