நாகப்பட்டினம் -ஜீலை ,28,2024
Newz -webteam
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப தலைமையில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இரு சக்கர வாகனத்தில் சென்று விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்
சமீப காலமாக, குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் மற்றும் வன்கொடுமை தாக்குதல் அதிகமாக காண முடிகிறது. வீடு, கல்லூரி, பள்ளி,மற்றும் வேலை செய்யும் இடம் வரை அனைத்து இடங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. அதிலும் சில நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட தெற்கு பொய்கை நல்லூர் பகுதியில் கணவனை இழந்து வாழும் 40 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் அவர்களுடைய மகள் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்,
இதில் 40 வயது பெண் தற்சமயம் உடல் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த குற்ற சம்பவத்தை கண்டறிய நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியதில் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான முத்துக்குமார் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் தற்சமயம் அவருக்கு குண்டர் தடுப்பு சட்டமும் காவல்துறையினரால் தயார் செய்யப்பட்டு வருகிறது, இந்த சம்பவத்தின் எதிரொலியாக நாகை மாவட்டம் முழுவதும் சமூக ஆர்வலர்கள், வணிகர்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அமைப்பினர் என பல்வேறு அமைப்புணர் போராட்டத்தில் ஈடுபட்டனர் இப் போராட்டமானது சுமூகமான பேச்சுவார்த்தையின் மூலம் முடித்து வைக்கப்பட்டது, இருந்த போதிலும் இந்த சம்பவத்தின் எதிரொலியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பெரும் அச்சம் காட்டுத்தீயாய் பரவியது , இதனை அறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ. கா. ப இந்த அச்சுறுத்தலை சரி செய்யும் விதமாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாகவும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ. கா. ப அவர்களின் தலைமையில்சுமார் 150க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் காவலர்கள் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டார்கள்,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் தொடங்கப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியானது ஆரிய நாட்டுத் தெரு கடற்கரை,மாதா கோவில், மீண்டும் புதிய பேருந்து நிலையம் வழியே சென்று அக்கரைப்பேட்டை ரோடு, தெற்குப் பொய்கை நல்லூர், நான்கு ரோடு கீழத்தெரு ஆகிய வழியில் சென்று பறவை கடை தெருவில் விழிப்புணர்வு பிரச்சாரத்துடன்
முடிக்கப்பட்டது. மேலும் இந்த விழிப்புணர்வு பிரச்சார கூட்டத்தில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் பேசுகையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இனி யாரும் அச்சப்படத் தேவையில்லை, எந்த ஒரு சிக்கலான சந்தர்ப்பங்களிலும் பெண்கள் துணிச்சலாக செயல்பட வேண்டும்,பெண்களின் பாதுகாப்புக்கு உறுதுணையாக நாகை மாவட்ட காவல் துறையினர் இருக்கிறோம் எனவும், சைபர் கிரைம் குற்றங்கள் பற்றியும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.
மேலும் உங்கள் ஊரில் யாரேனும் சந்தேகப்படும் நபர்கள் சுற்றித்திரிந்தாள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் அல்லது உங்கள் எஸ் பி யுடன் பேசுங்கள் 8428103090 மற்றும் சைபர் கிரைம் குற்றங்களுக்கு 1930 என்ற சிறப்பு சேவை எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கலாம் தாங்கள் தெரிவிக்கப்படும் தகவல் பாதுகாக்கப்படும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
0 Comments