சென்னை – மே -21,2023
newz – webteam
காவல்துறையுடன் விஐடி பல்கலைகழகம் இணைந்து நடத்திய சைபர் ஹேக்கத்தான் போட்டி
வெற்றி பெற்றவர்களுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் பரிசு
சென்னை சைபர்கிரைம் போலீஸ் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய சைபர் ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் ரொக்கம் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
சென்னை பெருநகர காவல்துறை மற்றும் சென்னை விஐடி பல்கலைக்கழகம் இணைந்து 2வது சைபர் ஹேக்கத்தான் போட்டியை கடந்த மார்ச் மாதம் 13ம் தேதியன்று அறிவித்தது. சைபர் கிரைம் அதிகாரிகளின் புலனாய்விற்கு உதவி செய்யும் வகையில் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை மற்றும் தொடர்புடைய வாலட்டினை கண்டறிதல், மொபைல் போனிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை விரைந்து மீட்டெடுத்தல் உள்ளிட்ட
உள்பட 5 தலைப்புகளில் போட்டியை அறிவித்தது. 3 குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று சென்னை, கேளம்பாக்கத்திலுள்ள விஐடி பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற 2வது சைபர் ஹேக்கத்தானின் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழாவில், சிறந்த 3 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ‘‘2வது சைபர் ஹேக்கத்தான்” முதலிடம் பெற்ற விஐடி பல்கலைக்கழகத்தின் நிஷாத் பூலே, பிரஜ்வால் ஸ்ரீமாலி மற்றும் ராபின் ராய் அடங்கிய குழுவுக்கு மற்றும் பணம் ரூ. 50 ஆயிரம், 2வது இடம் பெற்ற சென்னை KRM Public பள்ளியின் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரதிக்குக்கு ரூ. 30 ஆயிரம், 3வது இடம் பிடித்த கோவை ஸ்ரீகிருஷ்ணா பொறியில் கல்லூரியின் ஸ்நேஹா ஜெனார்தனன், யாஷு வெங்கட் குழுவுக்கு 20 ஆயிரம் என மொத்தம் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் காஞ்சனா பாஸ்கரன், சைபர் கிரைம் வல்லுநர்கள் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணைக்கமிஷனர் நாகஜோதி மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
0 Comments