தூத்துக்குடி – ஜீன் -14,2023
newz – webteam
வாட்ஸ் ஆப் குரூப்களில் ‘‘New Pink Look Whatsapp officially Launched with Extra Features must try this என லிங்க் பரவி வருகிறது. இது ஒரு வைரஸ் ஆகவே இதை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல வாட்ஸ் ஆப் குரூப்களில் ‘நியூ பிங்க் வாட்ஸ் ஆப்” என லிங்க் பரவி வருகிறது. இது ஒரு வைரஸ். ஆகவே யாரும் இதை யாருக்கும் பகிர வேண்டாம். இந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களுடைய செல்போன் ஹேக் செய்யப்பட்டு, உங்கள் அனைத்து தகவல்களும் திருடப்படும். அத்துடன் மட்டும் இல்லாமல் அந்த வைரஸ் உள்ள லிங்க உங்களுடைய செல்போனில் உள்ள அனைத்து குழுக்கள் மற்றும் உங்களுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட்டு அவர்களையும் சிரமத்திற்குள்ளாக்கும். இது வாட்ஸ் ஆப் பயனாளர்களை குறி வைத்து பரப்பக்கூடிய வைரஸ் ஆகும். ஆகவே அனைவரும் இந்த லிங்க் உங்கள் வாட்ஸ் ஆப்பில் வந்தால் கிளிக் செய்ய வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
0 Comments