தூத்துக்குடி -ஜீன் -19,2023
newz – webteam
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 6 காவல் ஆய்வாளர்கள் உட்பட 51 காவல்துறையினர் மற்றும் நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்து சிறப்பாக பணியாற்றிய உதவி அரசு வழக்கறிஞர் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
,தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றுத்தர தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் Iல் திறம்பட வாதிட்ட உதவி அரசு வழக்கறிஞர் முருகபெருமாளின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை கொலை செய்து தங்க நகைகளை பறித்து சென்ற வழக்கில் எதிரியை 24 மணி நேரத்தில் கைது செய்து திருடி சென்ற 11½ சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 18,400/- பணம் ஆகியவற்றை கைப்பற்றி எதிரியை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு முத்துராமன், தூத்துக்குடி நடமாடும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் கலா லட்சுமி, உதவி ஆய்வாளர்கள் முத்துராஜா, எபனேசர் மற்றும் தலைமை காவலர் கிருஷ்ணன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கையின் போது சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 3 எதிரிகளை கைது செய்து 120 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், குலசேகரபட்டினம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், திருச்செந்தூர் போக்குவரத்துப் பிரிவு தலைமை காவலர் ராஜ்குமார், ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் இசக்கியப்பன், ஆத்தூர் காவல் நிலைய தலைமை காவலர் சொர்ணராஜ் திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் கார்த்திகேயன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 எதிரிகளை கைது செய்து அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்த தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் மற்றும் முதல் நிலை காவலர் சத்திரியன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 எதிரிகளை விரைவாக கைது செய்த ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் முத்து, தலைமை காவலர் ஜேக்கப் தங்கமோகன், முதல் நிலைக் காவலர் முத்துக்குமார், காவலர்கள் பென்ஜான்சன் மற்றும் திரு. முனியசாமி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒரு ஆண்டு காலமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் அசாம் மாநிலம் சென்று மேற்படி சிறுமியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கின் கோப்பை நீதிமன்ற விசாரணைக்கு எடுக்க சிறப்பாக பணியாற்றிய புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி, பெண் காவலர் செல்வி. முத்துலட்சுமி மற்றும் சிப்காட் காவல் நிலைய காவலர் சதீஷ்குமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 20,000/- அபராதம் பெற்றுதந்து சிறப்பாக பணியாற்றிய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி, சிறப்பு உதவி ஆய்வாளர் . மணிமேகலை தலைமை காவலர்கள் கிறிஷ்டி பெமிலா, கிருஷ்ணவேணி மற்றும் முதல் நிலை பெண் காவலர் மகேஸ்வரி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 2 எதிரிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து 13½ சவரன் தங்க நகைகள் மற்றும் 25 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுதாகர், தலைமை காவலர் சங்கர் காவலர்கள் மாரீஸ்வரன் மற்றும் சிங்கராஜ் மெச்சதகுந்த பணிக்காகவும்,
முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூபாய் 60 லட்சம் மதிப்புள்ள 120 டன் பொட்டாசியம் உரத்தை கடத்திச் சென்ற வழக்கில் 2 எதிரிகளை அதிரடியாக கைது செய்த முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர், தலைமை காவலர்கள் சதீஷ்குமார், அருணாச்சலம், முதல் நிலை காவலர் செல்வின் ராஜா மற்றும் தனிப்பிரிவு காவலர் ஜான்சன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட 3 எதிரிகளை விரைந்து கைது செய்த ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிவராஜா, ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலர் முருகேஷ்பாபு மற்றும் திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் சுந்தர்ராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த விபத்தில் காயமடைந்த 2 வயது குழந்தையை சில நிமிடங்களில் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிறப்பாக பணியாற்றிய செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அனந்த முத்துராமன், சேரகுளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் முதல் நிலை காவலர் . சாரதி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த வந்த நிலையில் மேற்படி எதிரியை கைது செய்த கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப், முதல் நிலை காவலர்கள் சேக் ஹயாத் மற்றும் திரு. கருப்பசாமி ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
கோவில்பட்டி நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 18 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 36 சாலை தடுப்புகளை புதிதாக வைத்து திறம்பட போக்குவரத்து விதிமுறைகளை சீர்செய்த கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், தலைமை காவலர் ஸ்டீபன் இளையராஜா, முதல் நிலை காவலர் பால்ராஜ் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,
ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் எதிரிகள் மற்றும் சாட்சிகளுக்கு அதிக அளவில் அழைப்பாணைகளை சார்பு செய்த ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில்குமார் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு ஆயுள் தண்டனை பெற்றுதர சிறப்பாக பணிபுரிந்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் செல்வகுமார் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 10,000/- அபராதமும் பெற்றுத்தர உதவியாக இருந்த புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர் செல்வி. முத்துலட்சுமி என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
6 காவல் ஆய்வாளர்கள் உட்பட 51 காவல்துறையினர் மற்றும் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் I உதவி அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.
0 Comments