நெல்லை மாநகரம் – ஜீன் -19,2023
newz – webteam
தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்களின் 50வது பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மகளிர் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய படகோட்ட குழு தமிழ்நாடு காவல்துறையின் வரலாற்றில் புதிய வரலாறு படைக்கும் விதமாக பயணத்தை மேற்கொண்டது. இது உலகில் மகளிர் காவலர்களால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட படகு பயணமாகும். 25 பேர் கொண்ட இக்குழு ஜூன் 10ம் தேதி முதல் ஜூன் 17ம் தேதி வரை சென்னையிலிருந்து கோடியக்கரை வரை சென்று மீண்டும் சென்னை வரை சுமார் 1000 கிலோ மீட்டர் பயணம் செய்ததில் திருநெல்வேலி மாநகரத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியினை செய்து முடித்து பதக்கத்துடன் வந்த பெண் தலைமை காவலர் 325 .வள்ளியம்மாள் என்பவரை 19-06-2023ம் தேதியன்று நேரில் அழைத்து பாராட்டிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள். உடன் காவல் துணை ஆணையாளர் தலைமையிடம் காவல் உதவி ஆணையாளர் டவுண் சரகம் மற்றும் டவுண் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலந்து கொண்டார்
0 Comments