அதிக வயதாகி திருமண ஆகாத ஆண்களை குறிவைத்து பலலட்சம் பணம் மோசடி செய்த பெங்‌‌‌களூர்‌‌‌ அழகி கைது…


சென்னை ஆவடி – ஜீலை -08,2023

newz – webteam

ஆந்திராவை சேர்ந்த அசோக் சைதன்யா த/பெ சாம்பசிவ ராவ் என்பவர் தற்போது ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அயப்பாக்கத்தில் தங்கி தனியார் கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு 33 வயதாகியும் திருமணத்திற்கு பெண் அமையாக காரணத்தால் அவர்களது பெற்றோரின் அறிவுரைப்படி தெலுங்கு மேட்ரிமோனியல் வளைதளத்தில் தனது சுயவிபரங்களை பதிவு செய்துள்ளார். அதை பார்த்து ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி வெங்கடரமணா என்பவரின் மகள் ஷ்ரவண சந்தியா என்பவர் தனது உண்மையான புகைப்படத்தை அனுப்பாமல் வேறு அழகிய சினிமா நடிகை போன்ற புகைப்படத்தை அசோக் சைதன்யாவிற்கு அனுப்பியுள்ளார். அந்த அழகில் மயங்கிய அசோக் சைதன்யாவும் தொடர்ந்து வாட்ஸ்ஆப்பில் உஷ்ரவண சந்தியாவுடன் பேசியும் தனது அந்தரங்க புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளார். மேலும் ஷ்ரவண சந்தியாவின் அழகில் மயங்கி அவர் கேட்கும் போதெல்லாம் தொடர்ந்து சுமார் 9 இலட்சம் வரை பணமும் தான் உபயோகித்து வந்த உயர்ரக ரூபாய் 65,000 மதிப்புள்ள கைபேசியையும் ஷ்ரவண சந்தியா சொன்ன முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளார். திருமணத்தை பற்றி பேசிய போதெல்லாம் ஷ்ரவண சந்தியா தவிர்த்து வரவே சந்தேகமடைந்த அசோக் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதன் பின் அசோக் சைதன்யாவின் நம்பர்களை பிளாக் செய்துள்ளார். அதனால் அசோக் சைதன்யா 1930 மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆவடி இணைய வழிக் குற்றப்பிரிவு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் ஷ்ரவண சந்தியா பெங்களுர் மடிவாலா பகுதியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருப்பதும், தெலுங்கு மேட்ரிமோளியில் மூலமாக கிடைத்த திருமணமாகாத ஆண்களை குறி வைத்து ஹனி டிராப்‌‌‌ என பெண்களின் மோக வலையில் அதிக வயதாகியும் திருமணமாகாத ஆண்களை தனது வலையில் விழ வைத்து அதன் மூலமாக ஏமாற்றி பணம் பறிப்பதும் அந்த பணத்தை கொண்டு ஷ்ரவண சந்தியா பல ஆண்களை ஏமாற்றி பழகி வந்துள்ளதும் தெரிய வந்து கைது செய்து பூந்தமல்லி முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் மத்திய சிறையில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பியும், ஷ்ரவண சந்தியா பயன்படுத்திய லேப்டாப் மற்றும் 3 கைபேசிகள் 6 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.ஹனி டிராப்‌‌‌க்காக ஷ்ரவண சந்தியா 8 மின் அஞ்சல் மற்றும் டெலிகிராம் ஆப்பையும் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Like it? Share with your friends!

admin user

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

நிருபர்கள் தேவை
Choose A Format
Personality quiz
Series of questions that intends to reveal something about the personality
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
Poll
Voting to make decisions or determine opinions
Story
Formatted Text with Embeds and Visuals
List
The Classic Internet Listicles
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission
Ranked List
Upvote or downvote to decide the best list item
Meme
Upload your own images to make custom memes
Video
Youtube and Vimeo Embeds
Audio
Soundcloud or Mixcloud Embeds
Image
Photo or GIF
Gif
GIF format