திருச்சி – ஜீலை -17,2023
newz – webteam
3 ஆயிரம் லஞ்சம் திருச்சி விபச்சார பிரிவு எஸ். ஐ. ரமா கைது. கேரளம் மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சரத் மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமை வாங்கி கேரளா ஆயுர்வேத மசாஜ் செண்டர் நடத்தி வருகிறார் இந்த மசாஜ் செண்டர் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலிசாரால் கடந்த ஏப்ரல் 2023 வழக்கு பதிவு செய்யப்பட்டது அஜிதாவின் மீதான அந்த வழக்கு ஆனது குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படட்டது இந்த வழக்கை அஜிதா சாதகமாக முடித்து தருவதாகவும் மேலும் குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய பரிந்துரை செய்யாமல் இருப்பதருக்கு ரூபாய் பத்து ஆயிரம் லஞ்சமாக தரும்படி கேட்டுக் கொண்டு உள்ளார் அஜிதா தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னால் கடை நடத்த இயல்லதால் தன்னால் ரூபாய் பத்து ஆயிரம் தர முடியாது கேட்டு கொண்டதின் பெயரில் எஸ் ஐ ரமா அட்வான்ஸ் 3 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே இந்த வழக்கை உனக்கு சாதகமாக முடித்து தர முடியும் என்று கூறி உள்ளார். லஞ்ச பணம் கொடுக்க மணம் இல்லாததால் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை புகார் அளித்ததால் டி எஸ் பி மணிகண்டன் தலைமை உத்தரவு பெயரில் ஆய்வாளர் சக்திவேல் , சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஸ், பாலமுருகன் மற்றும் போலிசார் கொண்ட குழுவினரின் ஆலோசனை பெயரில் அஜிதாவிடம் எஸ் ஐ ரமா இன்று காலை சுமார் 11 மணி அளவில் லஞ்சம் 3000 வாங்கிய போது கையும் b களவு மாக பிடிபட்டார் . விபச்சார தடுப்பு பிரிவு நான்கு வருட காலம் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது . திருச்சி மாநகரம் பொறுத்த வரை 60 ஸ்பா இயங்கி வருகிறது ஒரு ஸ்பா செண்டர் 10 முதல் 20 ஆயிரம் வரை எஸ் ஐ ரமா வங்கி கணக்கிற்கு கூகுள் பே மூலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments