திருச்சி – ஜீலை – 23,2023
newz – webteam
திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மனமகிழ் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
திருச்சி மாநகரத்தில் வசிக்கும் பொதுமக்கள், விடுமுறை
நாளான ஞாயிற்றுக்கிழமையை பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் மனமகிழ்ச்சி மற்றும் புத்துணர்விற்காக வயது வரம்பின்றியும், பாலின பேதமின்றியும் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடும் விதமாக, இன்று ஞாயிற்றுக்கிழமையன்று காலை 06.00 மணிமுதல் 10.30 மணிவரை, MGR சிலை அருகில் உள்ள நீதிமன்றம் சாலையில் “மனமகிழ் நிகழ்ச்சி” (Happy Salai) என்ற மனமகிழ் நிகழ்வாகனது Young Indians என்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திருச்சி மாநகர காவல்துறை சார்பாக சிறப்பாக நடைபெற்றது. இதுபோன்ற நிகழ்வு தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், உதகை, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் காவல்துறை சார்பாக விழிப்புணர்வு மனமகிழ் நிகழ்ச்சி நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்புற ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் K.N.நேரு , பள்ளிக்கல்விதுறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், வணக்கத்திற்குரிய திருச்சி மாநகர மேயர் அன்பழகன் மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, இ.கா.ப., ஆகியோர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியின் மூலம் காவல்துறை சார்பில் பொதுமக்களிடையே சாலை மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது குறித்தும், மது மற்றும் போதை பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், குழந்தைகள், சிறுவர் சிறுமியர், மாணவ மாணவியர், மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயனுள்ள வகையில் 30க்கும் மேற்பட்ட பொழுது போக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 15,000 த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தங்களின் மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். மேற்கண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டும், மூத்த குடிமக்கள் பொதுமக்கள், ஊடகங்கள் மற்றும் நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி அனைவருக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் மனமார நன்றியினை தெரிவித்து கொண்டார்
0 Comments