நாகபட்டினம் – ஆகஸ்ட் -09,2023
newz – webteam
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ கா ப அவ தலைமையில் பள்ளி குழந்தைகளுக்கு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் ‘ போக்சோ சட்டத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார கூட்டம் ஏற்படுத்தப்பட்டது
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் போதைப் பொருட்களின் தீங்கினை எடுத்துரைக்கவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி குற்றத்தை கட்டுப்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் மணக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ‘மகளே உனக்காக’ என்ற தலைப்பில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு 150 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பின்பு ஆலங்குடியில் புதிதாக பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ. கா. ப திறந்து வைத்தார்
0 Comments