தூத்துக்குடி – ஆகஸ்ட் -09,2023
newz – webteam
புளியம்பட்டி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் திடீர் ஆய்வு.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று புளியம்பட்டி காவல் நிலையத்தையும், அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்களையும் பார்வையிட்டு மேற்படி காவல் நிலைய போலீசாருக்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன், புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், மணியாச்சி காவல் நிலைய ஆய்வாளர் சுகந்திர தேவி, புளியம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ் நாராயணன், நாரைக்கிணறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
0 Comments