திருநெல்வேலி – ஆகஸ்ட் -11,2023
newz – webteam
தமிழ்நாடு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டை போதைபழக்கமில்லாத மாநிலமாக மாற்றி நம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்வதற்கு 11.08.2023 – ல் மாநில அளவிலான இயக்கம் செயல்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது . இது குறித்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், இ.கா.ப., கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படி, இன்று “போதை பழக்கமில்லாத தமிழ்நாடு” என்ற இலக்கினை எதிர் நோக்கி மாநில அளவிலான இயக்கம் செயல்படுத்துவது தொடர்பாக, போதை பழக்கத்திற்கு எதிராக பள்ளி / கல்லூரி மற்றும் அலுவலகங்களில் உறுதி மொழி எடுத்தல், போதைப் பொருளினால் உண்டாகும் தீமை குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தென்மண்டலத்தில் பல்வேறு கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவினை அழித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன்பொருட்டு, திருநெல்வேலி சரகத்திலுள்ள மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள சுமார் 505 பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் சுமார் 1,96,654 மாணவர்கள் மற்றும் காவல் அலுவலர்கள் / அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் போதை பழக்கத்திற்கு எதிராக 11.08.2023 அன்று உறுதிமொழியினை எடுத்தனர். போதை பொருட்கள் உபயோகிப்பதை தவிர்க்கும் பொருட்டு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் நம் தமிழ்நாட்டை போதை பழக்கமில்லாத மாநிலமாக மாற்றி நம் இந்திய நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்வதற்கு எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கைகள் பற்றியும் மாணவ மற்றும் மாணவிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இவ்விழிப்புணர்பு தொடர்பாக திருநெல்வேலி மாநகரம் மற்றும் திருநெல்வேலி சரகத்தில் உள்ள மாவட்டங்களில், பல்வேறு இடங்களில், சுமார் 505 சுவரொட்டி / விளம்பர பேனர்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு முதல்வர் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவினை அழிக்கும் நிகழ்வை காணொலி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார் . இதன்பொருட்டு, மதுரை தென் மண்டல காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை , ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மாநகரம் மற்றும் மதுரை மாநகரத்தில் உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 967 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 8,431 கிலோ கஞ்சாவினை திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா, பாப்பான்குளம் கிராமத்தில் உள்ள Aseptic Systems BMWM நிறுவனத்தில் வைத்து, இன்று மரு . கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர், திருநெல்வேலி மற்றும் தென் மண்டல போதை பொருட்கள் ஒழிப்பு குழு தலைவரான பிரவேஷ் குமார், இ.கா.ப., காவல்துறை துணைத்தலைவர், திருநெல்வேலி சரகம் மற்றும் இதர உறுப்பினர்களான . E.T. சாம்சன், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், தென்காசி மாவட்டம், A. பிரதீப் , இ.கா.ப., துணை ஆணையாளர், தெற்கு, மதுரை மாநகரம் மற்றும் T. வித்யாராணி, உதவி இயக்குநர், இயங்கும் தடய அறிவியல் ஆய்வகம், மதுரை ஆகியோர்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டது.
0 Comments