சென்னை – ஆகஸ்ட் -26,2023
newz – webteam
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், ‘நம்ம ஹெல்மெட் என்ற போக்குவரத்து விழிப்புணர்வு முகாமினை துவக்கி வைத்தார்.
உங்கள் பாதுகாப்பே எங்கள் முக்கியத்துவம்” என்ற குறிக்கோளுடன், சென்னை பெருநகர போக்குவரத்து காவல், போக்குவரத்து விதிகளை கண்டிப்பான முறையில் அமல்படுத்துவதன் மூலம் சாலைகளில் விபத்துகளை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்கள் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துவதன் மூலம், பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் நடைமுறைகளின் முக்கியத்துவத்தை சாலை பயனாளர்களுக்கு உணர்த்துவதற்காக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் பல்வேறு நுட்பங்களை கையாண்டு வருகிறது.
பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில், தலைகவசம் அணிவதை உறுதி செய்வது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. ஏனெனில் இது சாலைப் பயனாளர்களின் உயிரைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலைகவசம் அணிவதை குறித்த சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டை விட, இருச்சக்கர வாகன ஓட்டுனர் தலைகவசம் அணிவது 1.9% அதிகரித்துள்ளது மற்றும் உடன் பயனிப்பவர் தலைகவசம் அணிவது போக்குவரத்து விதிகளை 9.7% அதிகரித்துள்ளது. கண்டிப்பான முறையில் அமல்படுத்தப்பட்டதாலும் சாலை பயனாளர்களுக்கு விழிப்புணர்வை
ஏற்படுத்தியதின் மூலம் மட்டுமே இது சாத்தியமானது. தலைகவசம் அணிவதை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஒரு பகுதியாக, “நம்ம ஹெல்மெட்” விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அதிகாரிகளால் 19.08.2023 முதல் சென்னை நகரில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக, (26.08.2023), சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர். இகாப, அவர்கள் இன்று (26.08.2023) காலை. அண்ணாசாலை, ஸ்பென்சர் சந்திப்பில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் மற்றும் Ladnun Nagarik Parishad (LNP) ஒருங்கிணைந்து நடத்தும் “நம்ம ஹெல்மெட்” என்ற தலைகவச விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார், காவல் ஆணையாளர் அவர்கள் தலைகவசம் அணியாமல் பயனிக்கும் 150 இருச்சக்கர வாகன ஓட்டுநர்கள்/ உடன் பயனிப்பவர்களுக்கு தலைகவசம் வழங்குகிறார். மேலும், தலைகவசம் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு காணொளி காட்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு உதவிய LNP அதிகாரிகளின் அற்பணிப்பு மற்றும் முயற்சிகளுக்காக பாராட்டப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல், கூடுதல் ஆணையாளர் ஆர்.சுதாகர். இகாய, இணை ஆணையாளர் (போக்குவரத்து/தெற்கு), N.M. மயில்வாகனன்.இ.கா.ப.. போக்குவரத்து துணை ஆணையாளர் (கிழக்கு) சமய் சிங் மீனா,இ.கா.ப. காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments