திருநெல்வேலி – ஆகஸ்ட் -26,2023
newz – webteam


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளருக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்று வருகிறது.
தென் மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் இ.கா.ப.,மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன் ஆகியோர் இன்று எழுத்துத்தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு துறை ரீதியான ஆண்கள் விண்ணப்பதாரர்கள் 5264 பேர்கள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் 1645 உட்பட மொத்தம் 6909 விண்ணப்பித்திருந்தனர். இதில் இன்று நடைபெற்ற தேர்விற்கு ஆண் விண்ணப்பதாரர்களில் 5264 பேர்களில் 4312 பேர்கள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களில் 1645 பேர்களில் 1304 பேர்கள் உட்பட 5616 பேர்கள் மட்டும் தேர்வு எழுதினர் 1293 பேர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
0 Comments