சென்னை – ஆகஸ்ட் -10,2023
newz – webteam
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், புனித தோமையர்மலை மாவட்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள்
மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சென்னை பெருநகரில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், Drive Agtirst Drug (DAD) என்ற பெயரில் போதைப்பொருட்களுக்கு எதிரான சிறப்பு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டும் பள்ளி. கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களான வணிக வளாகங்கள். கடற்கரை. பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் இதர இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தியும் போதைப்பொருட்கள் நடமாட்டம் ஒழிக்கப்பட்டு வருகிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர். இ.கா.ப. 08.08.2023 முதல் 13.08.2023 வரை போதை பொருட்களுக்கு எதிரான
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் முகாம்கள் நடத்த உத்தாவிட்டார்.. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல். புனித தோமையர்மலை காவல் துணை ஆணையாளர் தீபக் சிவாச், இகாய, தலைமையில், மீனம்பாக்கம் சரக உதவி ஆணையாளர் ஜீவானந்தம், மடிப்பாக்கம் சரக உதவி ஆணையாளர் பிராங் டி ரூபன் மேற்பார்வையில் S-3 மீனம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினர் நேற்று மீனம்பாக்கம் AM ஜெயின் கல்லூரி வளாகத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது காவல் குழுவினர் சார்பில், போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், உயிரிழப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் காவல் துறை சார்பில் முன்மொழிந்த போதை ஒழிப்பு உறுதிமொழியை கல்லூரி மாணவ, மாணவிகள் ஏற்றுக் கொண்டனர். பின்னர் உறுதிமொழி மேற்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் காவல் துணை ஆணையாளர் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 2000 மாணவ, மாணவிகள். பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், புனித தோமையர்மலை உதவி ஆணையாளர் முரளி தலைமையி, s-1 புனித தோமையர்மலை காவல் ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினர் ஒருங்கிணைப்பில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அடிப்பகுதியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு குறித்து பரை அடித்து போதை பொருள் விழிப்புணர்வு பாடல் இசைத்தும், விழிப்புணர்வு நாடகம் நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பின்னர் காவல்துறையினர் மூலம் போதை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொண்டனர்.
0 Comments