ஆவடி – ஆகஸ்ட் -29,2023
newz – webteam
“போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற கோட்பாட்டை வளியுறுத்தி இன்று (29.08.2023) ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் கூல் லிப், ஹான்ஸ் போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்வதை தடை செய்யும் நோக்கத்தில் அதிரடி சோதனை மேற்கொள்ள காவல் ஆணையாளர் ஆவடி காவல் ஆணையரகம் அவர்கள் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்
இதன் அடிப்படையில், ஆவடி காவல் ஆணையாளர், .கி.சங்கர் இ.கா.ப கொரட்டூர் காவல் நிலைய பகுதியில் சோதனை மேற்கொண்டாத் காவல் இணை விஜயகுமார் இ.கா.ப., ஆவடி காவல் மாவட்ட பகுதியிலும், ஆணையாளர் செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் அவர்கள் மணலி காவல் சரகத்திலும், ஆவடி காவல் மாவட்ட துணை ஆணையாளர் SRMC காவல் சரகத்திலும், போதைப்பொருட்கள் தொடர்பான சோதனை மேற்கொண்டனர். போதைபொருட்களுக்கு எதிரான அதிரடி சோதனை ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட 58 இடங்களில் நடைபெற்றது. இச்சோதனையில் பள்ளிக்கு அருகாமையில் கூலிப் ஹான்ஸ் போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்த 58 எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று ஆவடி காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments