தூத்துக்குடி – ஆகஸ்ட் -31,2023
newz – webteam
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 16 வாகனங்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் பொது ஏலம் விடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 09 இருசக்கர வாகனங்கள் மற்றும் 07 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 16 வாகனங்கள் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் பொது ஏலம் விடப்படுகிறது.
இந்த ஏலத்தில் குழு உறுப்பினர்கள் தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், அரசு தானியங்கி பணிமனை பொது முதளாள் சந்திர பிரகாஷ், ஆயுதப்படை உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments