கோயம்புத்தூர் – செப் -01,2023
newz – webteam
காவலர் குடும்பத்திற்கான சிறுவர் பூங்காவினை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நலன் கருதி, அவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக நடைபயிற்சி மையம் மற்றும் காவலர்களின் குழந்தைகள் மகிழ்விற்காகவும், பொழுதுபோக்குக்காகவும் காவலர் குடியிருப்பு பகுதியில் சிறுவர் பூங்காவினை இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரிநாராயணன், இ.கா.ப, திறந்து வைத்தார்.
காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்களது நலன் கருதி சிறுவர் பூங்கா அமைத்து கொடுத்ததற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் மற்றும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும் தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர்.
0 Comments