திருநெல்வேலி – செப் -04,2023
newz -webteam
பள்ளி மாணவ, மாணவியருக்கு சமூக நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளி ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் , இன்று வள்ளியூர் கன்கார்டியா மேல்நிலைப் பள்ளிக்கு சென்று மாணவ, மாணவியருக்கு சமூக நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது மாவட்ட கண்காணிப்பாளர் மாணவ, மாணவிகளுக்கும் நாம் நம்மை சுற்றி இருப்பவர்களோடும், நம்முடன் தொடர்பில் இருப்பவர்களோடும், என்றும் ஜாதி, மத, வேறுபாடுகளை பார்க்கக் கூடாது எனவும் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற உயரிய சிந்தனையோடு பேசி பழக வேண்டும் என்றும், மாணவ, மாணவியராகிய நீங்கள் நன்கு படிக்க வேண்டும் எனவும், அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்ந்த அதிகாரிகளாக சிறந்து விளங்க வேண்டும் எனவும், தங்கள் பெற்றோர்கள் உங்களை கண்டு பெருமைபடும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும், மேலும் ஜாதி,மத அடையாளங்களை அணிந்து பள்ளிகள் மற்றும் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பரிசு வழங்கினார்.
பின் திருநெல்வேலி உதவி ஆட்சியர் சின்னராசு முன்னிலையில் வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ்குமார் அவர்கள், வள்ளியூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் உடன் இருக்கையில், பள்ளி ஆசிரியர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . N. சிலம்பரசன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாணவ, மாணவிகளின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளை தினமும் கண்காணிக்க வேண்டும் எனவும், ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் என முன்கூட்டியே தெரியவந்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். பின் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு அவர்கள் தனி மனித ஒழுக்கத்தை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும், ஜாதி, மத அடையாளங்களை பள்ளிக்கு அணிந்து வருவதை தடுப்பதன் மூலம் மாணவர்களின் மோதல் சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்கலாம் என அறிவுறுத்தினார்.
0 Comments