கிருஷ்ணகிரி – செப் – 08,2023
newz – webteam
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உட்கோட்டம் சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுத்துக்காரன் கொட்டாய் கிராமம் அருகே கடந்த 05.08.2023 ம் தேதி காலை சுமார் 18 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்கி பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றதாக கொடுத்த புகாரின் பேரில் சாமல்பட்டி காவல் நிலையத்தில் உரிய சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டு புலன் விசாரணை மேற்கொண்டதில் கடந்த காலங்களில் இதே போன்று சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்தது.
மேற்படி வழக்கின் எதிரியை கைது செய்ய ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் G. பார்த்திபன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சம்பவ இடங்களில் இருந்த CCTV கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்ததிலிருந்தும், செல்போன் அழைப்புகளின் செய்ததிலிருந்தும், சில சாட்சிகள் தரவுகளை பகுப்பாய்வு மற்றும் தகவலாளிகளை விசாரணை செய்ததிலிருந்தும், இதே குற்ற செயல்முறை கொண்ட சில வழக்குகளின் விவரங்களை அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதிலிருந்தும் எதிரி முருகன் த/பெ சகாதேவன் மடத்தனூர் கிராமம், போச்சம்பள்ளி என்பவருடைய முந்தைய குற்ற வரலாறு மற்றும் நடத்தைகள் சந்தேகத்திற்குரியது என்பது கண்டறியப்பட்டது. அறிவியல் சார்ந்த விசாரணையில் முருகன் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி காவல் நிலையம் மற்றும் ஊத்தங்கரை காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் எதிரி முருகன் மீது தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் குற்ற வழக்குகள் இருப்பது தெரியவருகிறது.
தனிப்படைகளின் தொடர் முயற்சியால் எதிரி முருகன் கடந்த 05.09.2023 ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஊத்தங்கரை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் G.பார்த்தீபன் தலைமையிலான தனிப்படையினரை தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இது போன்ற சம்பவங்களில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காவிட்டால் அது குற்றம் செய்வோருக்கு மேலும் துணிச்சலை கொடுப்பதுபோல் ஆகிவிடும். எனவே இது போன்ற சம்பவங்கள் நடக்கும் பட்சத்தில் பொதுமக்கள் முன்வந்து காவல்துறையில் புகார் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments