மதுரை – அக் -20,2023
newz – webteam
திருட்டு கும்பலை தட்டி தூக்கிய மதுரை மாவட்ட காவல்துறை.
கடந்த சில ஆண்டுகளாக மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலைய சரகங்களில் குறிப்பாக சிலைமான் மற்றும் கருப்பாயூரணி காவல் நிலைய சரகங்களில் இரவு நேரங்களில் தங்களது வீட்டில் ஆட்கள் தூங்கிக் கொண்டி இருக்கும் போதே நகை மற்றும் பணத்தினை ஒரு கும்பல் கன்னக் களவு செய்து கொள்ளையடித்து வந்தது.
அந்தக் கும்பலைப் பிடிக்க மதுரை மாவட்ட எஸ்பி R. சிவபிரசாத் இ.கா.ப உத்தரவுப்படியும் ஊமச்சிகுளம் உட்கோட்ட DSP (பொறுப்பு)கிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி சிலைமான் வட்டக்காவல் ஆய்வாளர் மோகன் அவர்களின் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் குமரகுரு கார்த்திக் மற்றும் காவல் ஆளிநர்கள் கொண்ட தனிப்படையினர் கொள்ளையர்கள் குறித்து தகவல்களை சேகரித்து வந்தனர்
இந்நிலையில் மேற்படி கொள்ளையர்கள் நேற்று இரவு கல்மேடு சந்திப்பு வழியாக சென்று பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டு இருப்பதாக தனிப்படைகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து தனிப்படையினர் கல் மேடு சந்திப்பில் தீவிர கண்காணிப்பில் இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை நிறுத்தி அவர்களை தனிப்படையினர் சோதனையிட்ட போது அவர்கள் கொள்ளையடிக்கத் தேவையான ஆயுதங்கள் மற்றும் கையுறை ஆகிவற்றை மறைத்து வைத்திருப்பதைத் தெரிந்து அவர்களை பிடித்து தீவிரமாக விசாரிக்க அவர்கள் மதுரை மாவட்ட சக்கிமங்கலம் இளமனூர் புதூரை சேர்ந்த பேச்சிமுத்து மற்றும் சோனை என்ற சோனைச்சாமி என்பதும் இவர்கள் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர் திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.
தீவிர விசாரணைக்குப் பின்னர் இவர்களிடமிருந்து இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 180 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கம் ரூபாய் 9,00,000/-(ஒன்பது லட்சம்) கைப்பற்றப்பட்டது.பின்னர் இவர்களுக்கு உடந்தையாக இருந்த இவர்களுடைய அண்ணன் பெரிய கருப்புசாமி மற்றும் இவர்களுடைய பெரியம்மா ஆசைப் பொண்ணு ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர் தொடர்ந்து இதுபோன்று குற்றச்செயலில் ஈடுபடுவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
0 Comments