திருவாரூர் – அக் -24,2023
newz – webteam
கொரடாச்சேரி காவல் சரகம் எருக்காட்டூரில் ராஜா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடப்புடைய நபர்கள் 1 மணி நேரத்தில் கைது.
கொரடாச்சேரி சேர்ந்த ராஜ 23, த/பெ.விஜயராகவன். என்பவர் திருவாரூர் நகர் பகுதிகளில் இளநீர் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும் விஜய், விமல் என்ற இரண்டு மகன்களும் வினிதா என்ற மகளும் உள்ளனர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வீரமாணி 40 பெரித்ரவேல், என்பவரின் மனைவி சங்கீதாவிற்கும் கடந்த 5 வருடங்களாக தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி இரவு மேற்கண்ட ராஜா என்பவர் குடிபோதையில் எருக்காட்டூர் வாய்க்கால் மதகு அருகில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சங்கீதாவின் கணவர் வீரமணி மற்றும் வீரமணியின் மைத்துனர் சரவணன் 30 த/பெ பன்னீர்செல்வம் போலோகம் என்பவரும் சங்கிதாவுடன் உள்ள தகாத உறவு குறிந்து கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இருவரும் ராஜாவை அருகிலிருந்த வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி கொலை செய்து, வாய்க்கால் மதகின் உள்ளே மறைத்துள்ளனர். மேற்கண்ட ராஜாவை கடந்த 18-10-23 முதல் காணாமல் போய்விட்டதாக அவரின் உறவினர்கள் தேடிவந்த நிலையில் இன்று சம்பவ இடத்தில் ராஜாவின் சடலமானது அழுகிய நிலையில் இருப்பதை கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் போலிசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு மேற்கண்ட நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். விசாரணையில் இருவரும் தாங்கள் நான் தண்ணீரில் அமுக்கி ராஜாவை கொலை செய்ததாக ஓப்புக்கொண்டுள்ளனர். இறந்தவர் உடலானது கைப்பற்றப்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திருவாரூரில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் நேரில்
பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்….
0 Comments