தென்காசி – அக் – 24,2023
newz – webteam
தென்காசி மாவட்டத்தில் சேத்தமரம் அருகே
பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தவறாக நடக்க முயன்ற நபர் கைது
சேர்ந்தமரம் காவல் நிலைய எல்கைகுட்பட்ட வென்றிலிங்காபுரம் பகுதியில் சோப்பு விற்பனை செய்வதற்காக வந்த கருப்பசாமி என்பவர் அப்பகுதியிலுள்ள ஒரு பெண்ணிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டு அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து தவறாக நடக்க முயன்றுள்ளார். உடனே அப்பெண் சத்தம் போடவும் அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இது குறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் திருவேல்பாண்டியன் விசாரணை மேற்கொண்டு மேற்படி அச்சங்குட்டம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த ராசு மணி என்பவரின் மகன் கருப்பாாமி(30) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்-
மேலும் புளியரை அருகே இடப் பிரச்சனையில் தம்பியை தாக்கிய அண்ணன் கைது
புளியரைக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேசவபுரம் பகுதியில் வசிந்து வரும் அருள்ராஜ் என்பவர் தனது தந்தையிடம் கிரயமாக இடம் வாங்கி வீடு கட்டி தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டிற்கு வந்த அருள் ராஜின் அண்ணனான கனகராஜ் என்பவர் தனக்கு தான் இந்த இடம் வேண்டும் என்று கூறி அறிவாளால் வீட்டில் குழி தோண்டியுள்ளார். இதை பார்த்த அருள்ராஜ் என் இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு அரிவாளால் அவரை தாக்கி இந்த வீட்டை இடித்து விடு இல்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து அருள்ராஜ் புளியரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் திருதீபன் குமார்
விசாரணை மேற்கொண்டு மேற்படி கேசவபுரம் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்த
ராமசாமி என்பவரின் மகன் கனகராஜ்(45) மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற
காவலுக்கு உட்படுத்தினார்.
மேலும் இன்று தென்காசி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை
பொருட்களை விற்பனை செய்ததாக 6 நபர்கள் கைது செய்யப்பட்டு
அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 360 கிராம் மதிப்புள்ள
புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சாலை விதிமுறைகளை மீறியதாக 787 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு
செய்யப்பட்டு 27 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
0 Comments