திருப்பத்தூர் – அக் -30,2023
newz – ameen
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த அருண் என்பவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாட்ஸ் ஆப்-பகுதி நேர வேலை சம்மந்தமாக வந்த லிங்க்-ஐ கிளிக் செய்து டெலிகிராம் குருப்பில்
சென்று அதில் சொன்னபடி யூடியுப் ரேட்டிங் கொடுத்து தினமும் ரூ.50/- முதல் ரூ.2500/- வரை சம்பாதிக்கலாம் என்று கூறியதன் பேரில் மேற்படி யூடியுப் ரேட்டிங் கொடுத்து முதலில் ரூ.150, ரூ300 என சம்பாதித்த பிறகு அவர்கள் கொடுத்த டாஸ்க்ஐ முடிக்க முதலில் ரூ.500 செலுத்தி பிறகு ரூ.650/- பெற்று பிறகு இரண்டாவதாக ரூ.1000/- செலுத்தி ரூ.1300/- பிறகு ரூ.7000/- செலுத்தி ரூ.11000/- பெற்றதால் மேலும் சம்பாதிக்க ஆசைபட்டு பல முறை பணம் செலுத்தி ரூ.18,53,292/- வரை செலுத்தி இழந்து விட்டதாக சைபர் க்ரைம் பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், இ.கா.ப., உத்தரவின்பேரிலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இரவீந்தரன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் ஆய்வாளர் பிரேமா தலைமையிலான குழு 19.06.2023-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு 12.07.2023-ல் வாதியின் வங்கியில் ரூ.15,00,000/- வரவு வைக்கப்பட்டு இன்று அதற்கான ஆவணங்கள் சம்மந்தப்பட்ட நபரிடம் காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
மேலும் பொதுமக்கள் தங்களது பணம் ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்யலாம் 24 மணி நேரத்திற்குள் புகார் பதிவு செய்யப்பட்டால் ஏமாற்றப்பட்ட பணம் திரும்ப பெற வாய்ப்புள்ளது. இதுபோன்ற சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தின் தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார் .
0 Comments