சென்னை – அக் -31,2023
newz webteam
சென்னை: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில் நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியதாக குற்றப் பத்திரிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது
சென்னை அமைந்தகரை பகுதியில் தலைமை இடத்தைக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் தமிழகத்தில் பல பகுதிகளிலும் கிளை அமைத்து செயல்பட்டு வந்தது. பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 30 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தருவதாகக் கூறி மோசடி செய்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் கடந்தாண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை துவக்கினர்.குறிப்பாக முதலீடு செய்த பணத்தை தங்க வியாபாரத்தில் முதலீடு செய்து இரட்டிப்பாக லாபம் தருவதாக ஆசை வார்த்தைக் காட்டி ஏமாற்றியுள்ளனர். இந்த வழக்கில் சுமார் ஒரு லட்சம் பேரிடம் 2,438 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததாக 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அதில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்நிலையில்
பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் தலைமறைவான ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ் நிர்வாகிகளை பிடிக்க இன்டர்போல் தீவிரம் காட்டுவதாக தகவல்் வெளிவாகியுள்ளது
ஆருத்ரா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆர்.கே.சுரேஷ், நிர்வாகிகளான ராஜசேகர், மகாலட்சுமி உள்ளிட்டோர் துபாயில் பதுங்கியிருப்பதாக தகவல்
வழக்கின் விவரங்களை மட்டுமே தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இன்டர்போல் அதிரடி
பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் வழக்கின் முக்கியத்துவம் குறித்த அறிக்கையை கேட்டது இன்டர்போல்
இன்டர்போல் அதிகாரிகள் 2 முறை துபாய் நாட்டிடம் உதவி கேட்ட நிலையில், விரைந்து கைது செய்ய அடுத்த கட்ட நடவடிக்கை
0 Comments