தூத்துக்குடி – நவ -10,2023
newz – webteam
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கண்காணிப்பு கோபுரம் அமைத்து பொதுமக்களின் பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினர்
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், IPS., அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும், திருட்டு சம்பவங்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியும், குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளின் புகைப்படங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை பதாகைகள் அமைத்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து இன்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், IPS., நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு பணியில் இருக்கும் காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
0 Comments