திருநெல்வேலி – நவ-20,2023
newz – webteam
வெடி பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் ஒருவர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது.
கூடங்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான இடிந்தகரை, மேற்கு கடற்கரை செங்கலனி ஓடை அருகேயுள்ள கருங்கற்களில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெடிக்க செய்து அப்பகுதி மக்களை பயத்தை ஏற்படுத்திய வழக்கில் ஈடுபட்ட இடிந்தகரை, சுனாமிகாலனியைச் சேர்ந்த அப்போலின் என்பவரின் மகன் வளன்(34), என்பவர் மற்றும் அவருடைய கூட்டாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்படி வளன் வெடிபொருட்களை பயன்படுத்திய வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஷியாம்சுந்தர் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன்.,பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.
0 Comments