திருச்சி – டிச-04,2023
newz – webteam
சென்னை காவல் உயர்பயிற்சியகத்தில் இந்த ஆண்டிற்காக மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் திருச்சி மாநகரம் சார்பில் கலந்து கொண்டு பதக்கம் பெற்ற பெண் காவல் ஆய்வாளரை மாநகர போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டினார்
தமிழ்நாடு காவல்துறையினருக்குகாக ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய மாநில அளவிலான காவல்துறை திறனாய்வு போட்டி சென்னை ஓமனாஞ்சேரியில் உள்ள காவல் உயர்பயிற்சியகத்தில் நவம்பர் 27முதல் டிச 01,வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மண்டலத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, இ.கா.ப.அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகரம் காவல்துறை சார்பில் 1 காவல் ஆய்வாளர், 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1 சிறப்பு உதவி ஆய்வாளர் என 4 பேர் கலந்து கொண்டனர்
மேற்கண்ட போட்டிகள் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும்காவல் ஆளிநர்கள் என தனித்தனியாக நடைபெற்றது. திருச்சி மாநகரத்தில் இருந்து சென்றவர்கள் தடய அறிவியல் தடய மருத்துவவியல் விரல்ரேகை பிரிவு சட்ட நுனுக்கங்கள் உட்பட 6 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 95 காவல் ஆய்வாளர்கள் முதல் காவல் ஆளிநர்கள் வரை கலந்து கொண்டனர் மேற்கண்ட போட்டிகளில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்.வனிதா , மாநில அளவில் தடய அறிவியலில் பிரிவில் 2ம் பரிசும் தடய மருத்துவியல் பிரிவில் 3,ம் பரிசும் வென்றுள்ளார் 2 பதக்கங்களை வென்ற ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதாவை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
திருச்சி மாநகர காவல்துறை சார்பாக போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வனிதாவை இன்று மாநகர காவல் ஆணையரகத்திற்கு நேரில் அழைத்து காவல் ஆணையர் .ந.காமினி, இ.கா.ப., காவல் ஆய்வாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, வெகுவாக பாரட்டினார். மேலும் தேசிய அளவிளான போட்டியில் கலந்து கொள்ள ஏதுவாக சில ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்
0 Comments