திருப்பத்தூர் – டிச -08,2023
Newz – ameen
வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.M.S.முத்துசாமி இ.கா.ப., இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்றப்பிரிவு (DCB), மாவட்ட குற்ற ஆவணகாப்பகம் (DCRB) நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு (ALGSC), சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு (SJHR) மற்றும் புகைப்பட பிரிவு (PHOTO SECTION) ஆகிய பிரிவுகளை வருடந்திர ஆய்வு மேற்கொண்டார். மேற்கண்ட பிரிவுகளில் அனைத்து பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மனுக்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையிலுள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்தும், நிலுவையிலுள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காணவும் உத்தரவிட்டார்.
வழக்கு கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்கவும், பதிவான வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கை நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் நடத்தி குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தருமாறு அறிவுறுத்தினார். மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் பொதுமக்களிடையே நற்பெயர் பெரும் வகையில் நல்ல முறையில் பணிசெய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.மேலும் ஆளிநர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் கேட்டறிந்தார். ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் இ.கா..ப., கூடுதல் கானல் கண்காணிப்பாளர்கள் முத்துமாணிக்கம் புஷ்பராஜ், தனிப்பிரிவு ஆய்வாளர் ரஜினி குமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
0 Comments