அரியலூர் – டிச -08,2023
newz – webteam
அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆய்வு திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் P.பகலவன் I.P.S. 08.12.2023 இன்று அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.முதலில் ஆயுதப்படையில் உள்ள அலுவலகங்களை ஆய்வு செய்து, படைக்கலன்களை பார்வையிட்டு, காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டுமாறும் அறிவுரை வழங்கினார். இதனையடுத்து மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு, அமைச்சு பணியாளர்களின் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையினையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா,அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அந்தோணி ஆரி (CCW)விஜயராகவன் (PEW) துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் திரு.சங்கர் கணேஷ் (அரியலூர் உட்கோட்டம்) வெங்கடேசன் (SJHR), சுரேஷ்குமார்(DCRB), காவல் ஆய்வாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உடன் இருந்த
னர்
0 Comments