மதுரை – டிச -14,2023
Newz – webteam
மதுரை மாநகர் டசெல்லூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட K.T.K தங்கமணி நகரில் கடந்த ம்தேதி அன்று நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்களில் 9 நபர்களை கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ரவுடி வினோத்குமார் என்பவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் இன்று செல்லூர் காவல் நிலைய ஆய்வாளர். ஆறுமுகம் மற்றும் தனிப்படையினர் திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை கிராமத்தில் பதுங்கி இருந்த மேற்கண்ட குற்றவாளியை கைது செய்து அவரிடம் கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய ஆயுதங்களை பற்றி விசாரிக்க மதுரை அருள்தாஸ்புரம் கனத்துப்பொட்டல் வயல் பகுதியில் மறைத்து வைத்திருந்ததாக கூறியதன் அடிப்படையில் அங்கு சென்று சம்பவத்திற்கு பயன்படுத்திய 2 இரத்தக்கறை படிந்த கத்திகளை கைப்பற்றி குற்றவாளி வினோத்குமாரை போலீஸ் பார்ட்டியுடன் காவல் வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து செனறு கொனடிருந்த போது மதுரை தத்தனேரி மெயின் ரோட்டில் LIC பாலத்தில் அருகில் தனக்கு வாந்தி வருவதாக கூறியதனால் குற்றவாளியை காவல் வாகனத்தில் இருந்து கீழே இறக்கியபோது போலீசாரிமிருந்து தப்பித்து ஓடியுள்ளார். தப்பி ஓடியவரை போலீசார் பிடிக்க முயற்சித்தப்போது அவர் பாலத்திலிருந்து கீழே குதித்ததில் அவருக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு எற்பட்டு, உடனடியாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். மேற்கண்ட முக்கிய குற்றவாளியான வினோத்குமாருக்கு பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கஞ்சா வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த அன்றே கொலை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளார். மேலும், இவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு வெளியே வந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
0 Comments