ஆவடி – டிச -15,2023
Newz – webteam
பைக் ரேசில் ஈடுபட்ட மூவர் கைது
ஆவடி காவல் ஆணையரகம், வண்டலூர், மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த ஆவடி காவல் ஆணையாளர் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் குழு ஒன்றை அமைத்து பைக் ரேஸ் நடைபெறாமல் கண்காணிக்க உத்தரவிட்டருந்தார். அதன் அடிப்படையில் அருமந்தை சோழவரம் வெளிவட்ட சாலையில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள் அதிரடியாக சோதனை செய்து பைக் ரேசில் ஈடுபட்ட செங்குன்றத்தை சார்ந்த பாபு மகன் ரமேஷ் /19 புழல் பகுதி சார்ந்த இலங்கை அகதிகள் முகாமில் உள்ள லெனின்ஜாய் மகன் லெனின் ஜான்சன் (எ) பில்லர் 18 திருவள்ளூரை சார்ந்த அன்பு மகன் தினேஷ் 21 ,ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து பைக் ரேசிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள். ஓட்டுநர் உரிமம் மற்றும் வீடியோ எடுக்க பயன்படுத்திய கைப்பேசிகள் ஆகியவற்றை கைப்பற்றி மூன்று் நபர்களை கைது செய்து நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
0 Comments